திருமணம் செய்ய மறுத்ததால் பெண்ணை கொலை செய்து பிரிட்ஜில் வைத்த கொடூரன்..!

டெல்லியில் திருமணம் செய்ய மறுத்ததால் பெண்ணை கொலை செய்து பிரிட்ஜில் வைத்த நபர் கைது.

டெல்லியில் திருமணம் செய்ய மறுத்ததால் பெண்ணை கொலை செய்து பிரிட்ஜில் வைத்த நபர் கைது.

தென்மேற்கு டெல்லியின் நஜப்கரில் உள்ள ஒரு தாபாவில் 25 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது. தாபா உரிமையாளரான சாஹில் கெலோட்டை அந்த பெண் காதலித்து வந்த நிலையில், சாஹில் அப்பெண்ணை விட்டுவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

இந்த நிலையில், உத்தம் நகரில் வசித்து வந்த அந்த இளம்பெண், சாஹிலிடம் தன்னை திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், அப்பெண்ணை கொலை செய்து ஃபிரிட்ஜில் வைத்துள்ளார்.

unknown node

பெண்ணின் சடலத்தை மீட்ட போலீசார் இதுகுறித்து சாஹிலிடம் விசாரணைமேற்கொண்டனர். அந்த விசாரணையில், 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பாக அந்த பெண் கொல்லப்பட்டதும், பின்னர் அந்த சடலமானது ஃப்ரீசர் பாக்சில் வைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து, போலீசார் தாபா உரிமையாளரான கெலோட்டை போலீசார் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.