சர்வதேச தூக்க தினத்தை முன்னிட்டு ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த நிறுவனம்.
நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தூக்கத்தை விரும்புவதுண்டு. தூக்கம் என்பது ஒவ்வொரு ம்னிதனுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் இன்று சர்வதேச தூக்க தினம் அனுசரிக்கப்படுகிறது.
சர்வதேச தூக்க தினத்தை முன்னிட்டு விடுமுறை
இதனையடுத்து பெங்களூரில் உள்ள Wakefit என்ற கம்பெனி, னைத்து ஊழியர்களுக்கும் விருப்ப விடுமுறை அளித்துள்ளது. இதுகுறித்து அந்த கம்பெனி வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 17 ஆம் தேதி சர்வதேச தூக்க தினத்தை Wakefit அதன் அனைத்து ஊழியர்களுக்கும் விருப்ப விடுமுறையாகக் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.
உறக்க ஆர்வலர்களாகிய நாம், உறக்க நாளை, குறிப்பாக தூக்க தினத்தை பண்டிகையாகக் கருதுகிறோம். மற்ற விடுமுறை நாட்களைப் போலவே இந்த விடுமுறையையும் நீங்கள் பெறலாம் என தெரிவித்துள்ளது.