அச்சு அசலாக ராகுல் காந்தி போல் இருக்கும் நபர்! புகைப்படம் எடுத்துக்கொள்ளும் மக்கள்.!

ராகுல் காந்தி தோற்றமளிக்கும் ஃபைசல்என்பவர் தனக்கு இது மகிழ்ச்சி அளிக்கிறது, மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர் என கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தோற்றமளிக்கும் ஃபைசல்என்பவர் தனக்கு இது மகிழ்ச்சி அளிக்கிறது, மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர் என கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோதா ஒற்றுமை யாத்திரையின் ஒரு பகுதியாக ஜம்மு காஷ்மீரில், தற்போது அணிவகுப்பு சென்று கொண்டிருக்கிறது, இந்த யாத்திரையில் அச்சுஅசல் ராகுல் காந்தியை போல் இருக்கும் ஃபைசல் சவுத்ரி என்பவர், ராகுலைப் போல அரைக்கை சட்டை அணிந்திருந்து ராகுலுடன் கலந்து கொண்டார்.

ஃபைசல், மீரட் மாவட்டத்தின் சங்கத் கிராமத்தில் வசிக்கிறார் மற்றும் உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் ஊழியராக உள்ளார், தான் ராகுல் காந்தியை போல தோற்றமளிப்பதை விரும்புகிறேன், நான் எப்போதும் அவரது செயல்பாட்டாளராக இருப்பேன் என கூறியுள்ளார். ராகுலுடன் புகைப்படம் எடுக்க முடியாத போது மக்கள் தன்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதாக அவர் கூறினார்.

மக்கள் ராகுல் ஜியை விரும்புகிறார்கள். அதனால்தான், ராகுல் ஜியுடன் படம் எடுக்க முடியாத நிலையில் தன்னுடன் படங்கள், வீடியோக்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அவரது தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பதை நான் அதிர்ஷ்டமாக உணர்கிறேன் என்று ஃபைசல் மேலும் கூறினார்.