மத்திய அரசுக்கு பதில் ஒன்றிய அரசு என அழைக்கக் கோரிய மனு..! தள்ளுபடி செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு.!

அனைத்துச் சட்டங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில் மத்திய அரசு என்று அழைப்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்று மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி

Delhi High Court

அனைத்துச் சட்டங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ தகவல்தொடர்புகளில்மத்தியஅரசுஎன்று அழைப்பதற்கு பதிலாக ஒன்றியஅரசுஎன்று மாற்ற மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை தள்ளுபடி செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மற்றும் நீதிபதி சஞ்சீவ் நருலா ஆகியோர் அடங்கிய அமர்வுமுன்,இந்த மனுவை எதிர்த்து மத்திய அரசு வழக்கறிஞர் கீர்த்திமான் சிங் மனுவை இந்த மனு தேவையற்றது மற்றும் பராமரிக்க முடியாதது. எனவே, இதைதள்ளுபடி செய்யவேண்டும் என்று வாதிட்டார்.

இருப்பினும், இதேபோன்ற பிரச்சினை நாடாளுமன்ற நிலைக்குழு முன் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு தள்ளுபடி செய்ய மறுத்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.