வேகமாக வந்த லாரி, வேன் மீது மோதி விபத்து..! 9 பேர் உயிரிழப்பு..!

மகாராஷ்டிராவின் கோவா-மும்பை நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி, வேன் மீது மோதியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிராவின் கோவா-மும்பை நெடுஞ்சாலையில் வேகமாக வந்த லாரி, வேன் மீது மோதியதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

மஹாராஷ்டிரா : ராய்காட்டின் ரெபோலி பகுதியில் உள்ள கோவா-மும்பை செல்லும் நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த வேன் மீது மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த மோதலில் ஐந்து ஆண்கள், மூன்று பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இந்த சம்பவத்தில் நான்கு வயது சிறுமியும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்தனர்.  விபத்திற்கு உள்ளான வேன் முழுவதுமாக சேதமடைந்துள்ளது.

இந்த விபத்தினால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடைபட்ட நிலையில் தற்பொழுது மீண்டும் போக்குவரத்து தொடங்க ஆரம்பித்துள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

unknown node