பீகாரில் ஆட்டோரிக்ஷா மீது டிரக் மோதி கோர விபத்து.! 7 பேர் உயிரிழப்பு.!

பீகார் மாநிலத்தில் மூன்று சக்கர வாகனத்தின் (ஆட்டோரிக்ஷா) மீது வெக்கலமாக வந்த டிரக் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

பீகார் மாநிலத்தில் மூன்று சக்கர வாகனத்தின் (ஆட்டோரிக்ஷா) மீது வெக்கலமாக வந்த டிரக் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

பீகாரில் உள்ள கதிஹார் மாவட்டத்தில் மாவட்ட தலைமையகத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ள தேசிய நெடுஞ்சாலை NH 81- இல்  வந்து கொண்டிருந்த மூன்று சக்கர வாகனத்தின் (ஆட்டோரிக்ஷா) மீது வேகமாக வந்த டிரக் மோதியுள்ளது. இந்த மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் மற்றும் ஆட்டோரிக்ஷாவில் இருந்த ஓட்டுநர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.

நெடுஞ்சாலையில் ஆட்டோரிக்ஷாவின் பின்னால் வந்துகொண்டிருந்த டிரக், ஆட்டோரிக்ஷாவை முந்தி செல்ல முற்பட்ட போது மோதியதாகவும், மோதலில் ஆட்டோரிக்ஷா பல மீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீஸ் இறந்தவர்களின் உடல்களை குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைப்பதற்கு முன் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்ல முயற்சிகளை மேற்கொண்டனர். மேலும் விபத்திற்கு காரணமான டிரக் மற்றும் அதன் டிரைவரைக் கண்டுபிடிக்க முயன்று வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.