ரயில் நிலையம் அருகே குழந்தைகளை கடத்த முயன்ற பெண்.! அதிரடியாய் கைது செய்த போலீஸ்.!

மகாராஷ்டிராவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் குழந்தைகளை கடத்த முயற்சித்த பெண்ணை போலீஸ் அதிரடியாக கைது செய்தது.

மகாராஷ்டிராவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் குழந்தைகளை கடத்த முயற்சித்த பெண்ணை போலீஸ் அதிரடியாக கைது செய்தது.

மகாராஷ்டிராவில் உள்ள பிம்ப்ரி-சின்ச்வாட் என்ற பகுதியில் குழந்தைகளை கடத்த முயன்ற பெண்ணை காவல் துறையினர் கைது செய்தனர். இரண்டு குழந்தைகளான மூன்று வயது சிறுமி மற்றும் ஐந்து வயது ஆண் குழந்தையை கடத்த முயற்சித்துள்ளார் அந்த பெண். புதன்கிழமை மாலை தலேகான் தபாடே மற்றும் கோரவாடி ரயில் நிலையத்திற்கு இடையிலான சாலைக்கு அருகில் இருந்து குழந்தைகளைக் கடத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து குழந்தையின் தாயார் தலேகான் தபாடே காவல் நிலையத்தில் புகாரளித்ததின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் கடத்த முயற்சி செய்த பெண் புகாரளித்தவரின் பக்கத்துக்கு வீட்டுக்காரர் என்று தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.