மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூர் மாவட்டத்தில் சார்ந்த கமலா பாய் என்ற கர்ப்பணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து அப்பெண்ணின் கணவர் உடனடியாகஜனனி எக்ஸ்பிரஸ் ஆம்புலன்ஸ்க்குதகவல் கொடுத்து உள்ளார்.
தகவல் கொடுத்து நீண்ட நேரமாக காத்து கொண்டு இருந்தனர்.ஆனால் ஆம்புலன்ஸ் வராததால் கமலா பாய்க்கு பிரசவவலி அதிகமாக ஏற்பட்டு உள்ளது.இதனால் தனது இருசக்கர வாகனத்தில் கமலா பாய்யை வைத்து கொண்டு அவரது கணவர் மருத்துவமனைக்கு சென்று உள்ளார்.
செல்லும் வழியில் பிரசவவலி அதிகமாக நெடுஞ்சாலையிலே பிறந்து உள்ளது.பின்னர் அருகில் இருந்த மருத்துவமனையில் தாயையும் ,குழந்தையும் அனுமதித்தனர்.இது குறித்து செவிலியர் கூறுகையில் , கையில் குழந்தையுடன் கமலா பாய்யை கணவர் அழைத்து வந்தார். தற்போது தாயும் ,சேயையும் நலமாக உள்ளனர்.