தனது சொகுசு காரை விற்று ஆக்சிஜன் சிலிண்டர் வழங்கும் இளைஞர்.! குவியும் பாராட்டுகள்.!

மும்பையை சார்ந்த 31 வயதான ஷானவாஸ் ஷேக். இவரது தொழில் நண்பனின் சகோதரி கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த பெண்ணை 5

மும்பையை சார்ந்த 31 வயதான ஷானவாஸ் ஷேக். இவரது தொழில் நண்பனின் சகோதரி கர்ப்பிணியாக இருந்துள்ளார். அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த பெண்ணை 5 மருத்துவமனைகளில் அனுமதிக்க மறுத்து விட்டனர். காரணம், காலியாக படுக்கைகள் இல்லை, வென்டிலேட்டர்கள் இல்லை என்பதால் அனுமதிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து, ஆறாவது மருத்துவமனைக்குள் நுழைவதற்கு முன்பு ஆட்டோவிலேயே உயிரிழந்துள்ளார். ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்காத காரணத்தால் அவர் மரணம் அடைந்தார் என ஷேக்  நண்பர்களில் டாக்டர்களாக இருந்த பலர் கூறினர்.

unknown node

ஒருவேளை சரியான நேரத்தில் ஆக்ஸிஜனைப் பெற்றிருந்தால் அவரது உயிரைக் காப்பாற்ற முடிந்திருக்கும் என எண்ணி,  தனது விலை உயர்ந்த சொகுசு காரை விற்று அதில் கிடைத்த பணத்தை பயன்படுத்தி தேவைப்படும் குடும்பத்திற்கு ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இலவசமாக வழங்கி வருகிறார். கிட்டத்தட்ட 250-க்கும் மேற்பட்ட நோயாளிகளை அவர் காப்பாற்றி உள்ளார்.