அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை நான்காவது நாளாக தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன.
அதானி பங்குகள் விலை 4வது நாளாக சரிவு:
unknown nodeஅதானி குழும நிறுவனங்களின் பங்குகள் விலை நான்காவது நாளாக தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளன. அதன்படி, அதானி போர்ட், அதானி பவர், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டோட்டல் கேஸ் மற்றும் அதானி வில்மர் நிறுவன பங்குகள் விலை சரிந்துள்ளன.
unknown nodeஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை:
unknown nodeஅதானி குழுமம் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து அதானி குழும பங்குகள் விலை தொடர்ந்து நான்காவது நாளாக சரிவை சந்தித்து வருகிறது.
இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டுஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் அதானிக்கு சொந்தமான நிறுவனங்கள் பங்கு சந்தையை தவறாக கையாள்கிறது, கணக்குகளில் முறைகேடு இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தது.
பணக்காரர் வரிசையில் அதானி சரிவு:
unknown nodeஇந்த அறிக்கையை தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு தொடர்ந்து சரிந்தன. இன்று நான்காவது நாளாக பங்குகள் விலை சரிவை சந்தித்துள்ளது. இதன் விளைவாக உலக பணக்காரர் வரிசையில் 3ஆம் இடத்தில் இருந்த தொழிலதிபர் அதானி 8வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
குறிப்பாக ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை தொடர்ந்து அதானி குழும பங்குகள் இதுவரை 5.57 லட்சம் கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது.