டெல்லி அமைச்சர்களாக அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் பதவியேற்றனர்!

ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் டெல்லி அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி, சவுரப் பரத்வாஜ் ஆகியோர் டெல்லி அமைச்சர்களாக பதவியேற்றனர்.

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அதிஷி மற்றும் சவுரப் பரத்வாஜ் ஆகியோர் டெல்லி கேபினட் அமைச்சர்களாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் லெப்டினன்ட் கவர்னர் (எல்ஜி) விகே சக்சேனா ஆகியோர் முன்னிலையில் பதவியேற்றனர்.

மதுபானக்கொள்கை முறைகேடு வழக்கு மற்றும் ஹவாலா பணமோசடி வழக்கில் சிபிஐ, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி அமைச்சர்கள் மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா செய்த பின்னர், அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோரை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், இருவரும் ஆளுநர் முன்னிலையில் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.