பிரதமர் மோடியுடனான மழைக்காட்டில் சாகச பயணம் செய்த புகைப்படத்தை பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார்.
முன்னாள் ராணுவ வீரரும் பிரிட்டிஷ் சாகசக்காரருமான பியர் கிரில்ஸ், இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலக தொலைக்காட்சிகளில் புகழ்பெற்ற மேன் Vs வைல்ட் என்ற பிரபலமான நிகழ்ச்சியில் பியர் கிரில்ஸூடன் பிரதமர் மோடி பங்கேற்றார்.
unknown node[File Image]
அதில் பிரதமர் நரேந்திர மோடி ஈரமான வனப்பகுதி வழியாக நடந்து சென்று பியர் கிரில்ஸ் உடன் இணைந்து ஒரு தற்காலிக படகில் குளிர்ந்த நதியில் பயணம் செய்திருந்தார். அந்நேரம் பயணம் செய்த புகைப்படத்தை பியர் கிரில்ஸ் தற்பொழுது பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்த புகைப்படத்தில் “இந்தியப் பிரதமருடன் மிகவும் ஈரமான மழைக்காட்டு சாகசத்தின் நினைவு” என்று பதிவிட்டுள்ளார்.
unknown node[File Image]
காடு எப்பொழுதும் தன்னை ஒரு சிறந்த சமநிலை தன்மையுடன் வைத்திருந்தது, இருந்தாலும் எனது படகு கசிந்து கொண்டிருந்தது என்று மேலும் பதிவிட்டுள்ளார். இவர் பகிர்ந்த புகைப்படத்திற்கு பதிலளித்த பயனர் ஒருவர், பிரதமர் உங்களின் மீது வைத்திருந்த நம்பிக்கை இணையற்றது என்று பதிலளித்துள்ளார்.
unknown node