குட்நியூஸ்..இந்தியாவில் 201 நாட்களுக்கு பிறகு...20 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு ....!

After 201 days in India ... less than 20,000 daily corona exposure ....!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 179 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,36,97,581 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 18,795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 8000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,36,97,581 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 179 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,47,373 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 26,030 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,9,58,002 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,92,206 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 87,07,08,636 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 1,02,22,525 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.