இங்கிலாந்தின் YouGov என்ற நிறுவனம் உலக அளவில் மக்களின் மனம் கவர்ந்தவர்கள் குறித்து சர்வே ஒன்றை நடத்தியிருந்தது. இதில் 42 நாடுகளைச் சேர்த்து 42 ஆயிரம் மக்களிடம் நடத்தப்பட்டது. இதில் இந்திய அளவில் மக்கள் மனம் கவர்ந்த ஆண்கள் பட்டியலில் பிரதமர் மோடி 15.66 % பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். இதையடுத்து பிரபல கிரிக்கெட் வீரர் எம்.எஸ் தோனி 8.58% பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
unknown nodeமூன்றாவது இடத்தை தொழிலதிபர் ரத்தன் டாட்டா பிடித்துள்ளார், 4வது இடத்தை ஒபாமாவும், 5வது இடத்தை பில்கேட்ஸ், 6வது இடத்தை சச்சின் டெண்டுல்கரும், 7வது இடத்தை வீராட் கோலியும், 8வது இடத்தை ஷாருக்கான், 9வது இடத்தை ஜாக்கிஜான், 10வது இடத்தை தலாய் லாமா ஆகியோர் பிடித்துள்ளனர்.
இந்திய அளவில் பெண்களுக்கான பட்டியலில், குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் 10.36% பெற்று முதலிடம் பிடித்துள்ளார். இதில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி 9.46% பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார்.
unknown node