இந்தியா:கடந்த 24 மணி நேரத்தில் 7,579 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை236ஆக பதிவாகியுள்ளது.இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,45,26,480 ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 7,579 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1100 குறைவு.மேலும்,543 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு தற்போது குறைந்துள்ளது.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,45,26,480 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 236 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,66,147 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து ஒரே நாளில் 12,202 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,39,46,749ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,13,584 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் இதுவரை 1,17,63,73,499 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 71,92,154 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன