இஹ்சான் கான் உயிரிழப்பு.! கொரோனாவால் இரண்டு சகோதரர்களை இழந்த நடிகர் திலீப் குமார்.!

மூத்த நடிகர் திலீப் குமாரின் தம்பி இஹ்சான் கான் கொரோனா உறுதி செய்யப்பட்டு லிலாவதி மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று இரவு 11 மணிக்கு இஹ்சான் கான் காலமானார் என மருத்துவமனை தெரிவித்துள்ளது.
90 வயதான இஹ்சான் கானுக்கு இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை இருந்ததாக லிலாவதி மருத்துவமனை தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 21 அன்று, திலீப் குமாரின் இளைய சகோதரர் அஸ்லம் கான் லிலாவதி மருத்துவமனையில் காலமானார்.
திலீப்பின் குடும்ப நண்பர் பைசல் பாரூக்கி தனது ட்விட்டரில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில், திலீப் இளைய சகோதரர் இஹ்சான் கான் சில மணி நேரங்களுக்கு முன்பு காலமானார். இதற்குமுன் அஸ்லம் கான் காலமானார் என பதிவிட்டுள்ளார்.