அண்ணா பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நாளை விசாரணை.!

அண்ணா பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
சமீபத்தில் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் மாணவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பட்டுள்ளது. அதில், நடப்பு கல்வி ஆண்டுக்கான முதல் பருவ கட்டணத்தை வருகின்ற ஆகஸ்ட் 30 தேதிக்குள் செலுத்த வேண்டுமென்றும் கட்டணம் செலுத்த தவறிய மாணவர்கள் ரூ.200 முதல் ரூ.500 வரை அபராதம் செலுத்த வேண்டும்.
செப்டம்பர் 5-ம் தேதிக்குள் கட்டணம் செலுத்த தவறினால் அந்த மாணவர்கள் தங்களுடைய படிப்பை தொடர விரும்பவில்லை என்று கருதப்பட்டு மாணவர்கள் பெயர்கள் செப்டம்பர் 6-ம் தேதி பதிவேட்டில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அந்த அறிக்கையில் தெரிவித்தது.
இந்நிலையில், செப்டம்பர் 5-ம் தேதிக்குள் செமஸ்டர் கட்டணங்களை செலுத்தாத மாணவர்களின் பெயர்கள் நீக்கப்படும் என்ற அண்ணா பல்கலைக்கழக உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025