கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம்.
கர்நாடகாவில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ளது. இந்த சமயத்தில் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் மே 10-ஆம் நடைபெறும் என்றும் இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 13-ஆம் தேதி எனவும் எனவும் தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
மும்முனை போட்டி:
unknown nodeகர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே ஆளும் கட்சியாக இருக்கும் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அம்மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மும்முனை போட்டி நிலவுகிறது.
கருத்து கேட்பு கூட்டம்:
unknown nodeஇந்த சமயத்தில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடலாமா? என்பது குறித்த கருத்துக் கேட்புக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, பெங்களூருவில் அதிமுக மாநிலச்செயலாளர் எஸ்.டி.குமார் தலைமையில் கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடலாமா? என்பது குறித்து நேற்று கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.
அதிமுக விருப்பம்:
unknown nodeஇந்த நிலையில், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் 2 அல்லது 3 தொகுதிகளில் போட்டியிட அதிமுக விருப்பம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 10 தொகுதிகளில் தமிழர்கள் அதிகமாக வசிக்கின்றனர். ஒட்டுமொத்த வாக்கு வங்கியில் 5% தமிழர்கள் உள்ளனர்.
அதிமுக வென்ற வரலாறு:
unknown nodeAIADMK started by-election work in Erode East constituency. [File Image]
தமிழர்கள் அதிகமுள்ள 10 தொகுதிகளில் 2 அல்லது 3ல் போட்டியிட அதிமுக தலைமை விரும்புவதாக கூறப்படுகிறது. பெங்களூரு, கோலார் ஆகிய பகுதிகளில் உள்ள தொகுதிகளை பாஜகவிடம் கேட்டுப்பெற அதிமுக திட்டமிட்டுள்ளது. கர்நாடக சட்டமன்ற தீத்தலில் ஏற்கனவே அதிமுக வென்ற வரலாறு உள்ளது. கேஜிஎப் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பக்தவச்சலம் 3 முறை வென்றுள்ளார்.
அதிமுக ஆயுத்தம்:
unknown node1983, 1989, 1999 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதுபோன்று காந்திநகர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு முனியப்பா இன்பவர் வெற்றி பெற்று இருந்தார். பெங்களூரு மாநகராட்சியில் அதிமுக சார்பில் 9 பேர் கவுன்சிலர்களாக இருந்துள்ளனர். எனவே, இம்முறையும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிட ஆயத்தம் ஆகி வருகிறது.