இந்தியா மற்றும் ஜப்பான் பங்குபெறும் வான்வழிப் பயிற்சி! அடுத்தவாரம் தொடக்கம்.!

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து 'வீர் கார்டியன்' எனும் வான்வெளிப் பயிற்சியை தொடங்க உள்ளன.

இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகள் இணைந்து ‘வீர் கார்டியன்’ எனும் வான்வெளிப் பயிற்சியை தொடங்க உள்ளன.

இந்திய விமானப் படையும், ஜப்பான் விமானத் தற்காப்புப் படையும் இணைந்து, அடுத்தவாரம் வான்வெளிப் பயிற்சியில் ஈடுபட உள்ளன. ‘வீர் கார்டியன்’ எனும் இந்த இருதரப்பு வான்வெளிப் பயிற்சி, ஜன-12இல் தொடங்கி ஜன-26 வரை, ஜப்பானின் ஹைகுரி விமான தளத்தில் நடைபெறுகிறது.

‘வீர் கார்டியன்-2023’க்கான இந்திய விமானப் படையில் நான்கு Su-30 MKI, இரண்டு C-17 கள் மற்றும் ஒரு IL-78 விமானங்கள் பங்குபெறுகின்றன. மேலும் ஜப்பானின் விமானப் படையில் நான்கு F-2 மற்றும் நான்கு F-15 விமானங்களுடன், இந்த வான்வெளிப் பயிற்சியில் பங்கேற்கிறது.