வந்தே பாரத் மிஷனின் கீழ் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் 8 விமானங்களை இயக்க உள்ளதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது. இந்த விமானங்கள் ஜூலை 1 -ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதி வரை இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இதில், சிட்னி மற்றும் மெல்போர்னுக்கு தலா நான்கு விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு நாளை மதியம் 12 மணி முதல் தொடங்க உள்ளது. இந்த முன்பதிவு ஏர் இந்தியா இணையதளத்தில் மட்டுமே புக்கிங் செய்ய முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த, வந்தே பாரத் மிஷனின் மூன்றாம் கட்டத்தின் மூலம் ஆஸ்திரேலியாவிலிருந்து மேலும், 2,300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.