குஜராத் கலவரம் – நரோடா படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை!

2002 குஜராத் கலவரத்தின்போது நரோடா காம் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

2002 குஜராத் கலவரத்தின்போது நரோடா காம் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின்போது 11 இஸ்லாமியர்கள் எரித்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். பாஜகவின் முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி, ஜெய்தீப் படேல் உட்பட 68 பேரரையும் விடுவித்தது நீதிமன்றம். இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி, பஜ்ரங் தள் தலைவர் பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட 86 பேரில் 18 பேர் வழக்கு விசாரணையின் போதே இறந்துவிட்டனர்.

2002ல் குஜராத் கலவரத்தின்போது பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர். நரோடா காம் என்ற பகுதியில் இரு இடங்களில் இஸ்லாமியர்கள் எரித்து கொல்லப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது. நரோடா பாட்டியா என்ற இடத்தில் நடந்த படுகொலை தொடர்பாக முன்னாள் அமைச்சர் மாயா கோட்னானி,  பஜ்ரங்கி உள்ளிட்ட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், 2002 குஜராத் கலவரத்தில் நாரோடா காம் இடத்தில் பாதிக்கப்பட்டவர்களை, யாரும் படுகொலை செய்யவில்லை என கூறியுள்ளனர். எனவே, படுகொலை செய்யப்படாத நிலையில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அனைத்து குற்றவாளிகளும் “விரைவு” நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.

2002 பிப்ரவரி 28 அன்று, அயோத்தியிலிருந்து திரும்பிய 58 கரசேவகர்கள் கொல்லப்பட்ட கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு எதிரான போராட்டத்தின் போது, அகமதாபாத் நகரின் நரோதா காம் பகுதியில் நடந்த வகுப்புவாத வன்முறையில் 11 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். நரோடா காம் படுகொலை வழக்கின் விசாரணை 2010-இல் தொடங்கி கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.