அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்..! என்ன காரணம்..?

Amarnath Yatra temporarily suspended due to inclement weather.

amarnadyatra

மோசமான வானிலை காரணமாக அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்.

ஜம்மு-காஷ்மீரில் 62 நாட்கள் நடைபெறும் ஸ்ரீ அமர்நாத் யாத்திரை, இந்த ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31, வரை நடைபெறும் என்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேச அரசாங்கம் அறிவித்து இருந்தது.

இந்த நிலையில், இந்த யாத்திரையை ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர்  கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த நிலையில், கடந்த 5 நாட்களாக 67 ஆயிரம் பேர் அமர்நாத் குகை கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துள்ளது. இதனையடுத்து தற்போது, மோசமான வானிலை காரணமாக இந்த யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.