இந்தியா-சீனா எல்லைபிரச்சனைக்கு மத்தியில், ஜம்மு-காஷ்மீர் அரசு இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில், முதல் உத்தரவில், எண்ணெய் நிறுவனங்களுக்கு (எல்.பி.ஜி) சிலிண்டர்களை இரண்டு மாதங்களுக்கு சேமித்து வைக்கும்படி கேட்டுக்கொண்டது.
மற்றொரு உத்தரவில், காண்டர்பால் மாவட்டத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் ஐடிஐ கட்டிடங்கள் காலி செய்யப்பட வேண்டும். இவை மத்திய ஆயுதப் படையினர் தங்குவதற்காக ஒப்படைக்கப்படும் என்று கூறியுள்ளது.
நிலச்சரிவு காரணமாக ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டபோது எந்தவிதமான பற்றாக்குறையையும் ஏற்படக்கூடாது என்பதற்காக எண்ணெய் நிறுவனங்களை இரண்டு மாதங்களுக்கு இருப்பு வைக்குமாறு ஜம்மு-காஷ்மீர் அரசு கேட்டுக் கொண்டது.
காஷ்மீரில் கடந்த ஆண்டு பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதமும் இதேபோன்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியது. ஆகஸ்ட் மாதம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. இந்த இரண்டு உத்தரவுகளும் காஷ்மீரில் உள்ள மக்கள் மத்தியில் பீதியையும், பதட்டத்தையும் அதிகரித்துள்ளது.
லடாக் எல்லையில் கடந்த 15-ம் தேதி நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதன் விளைவாக இந்தியாவுக்கும், சீனாவிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…