திடீரென அதிகரித்த கொரோனா ! மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

Amit Shah reviews corona situation as some states report spike in cases

ஒரு சில மாநிலங்களில் கொரோனா திடீரென அதிகரித்ததை அடுத்து நாட்டின் கொரோனா நிலைமை தொடர்பாக  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.

மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், சத்தீஸ்கர் மற்றும் மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா எண்ணிக்கை திடீரென அதிகரித்ததாக செய்திகள் வந்துள்ளன.

இந்நிலையில் கொரோனா திடீரென அதிகரித்ததை அடுத்து நாட்டின் கொரோனா நிலைமை தொடர்பாக  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனை  கூட்டத்தில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், உள்துறை செயலாளர் அஜய் பல்லா மற்றும் இரு அமைச்சகங்களின் உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

தற்போது நடைபெற்று வரும் தடுப்பூசி செலுத்துதல்  மற்றும் வைரஸ்  பரவுவதை சரிபார்க்க தேவையான நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்  பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு வழங்கக்கூடிய உதவிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.