#BREAKING: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அமித்ஷா.!

அமித்ஷாவிற்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.

அமித்ஷாவிற்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது.

கடந்த 2-ம் தேதி  உள்துறை அமைச்சர் அமித்ஷா  தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு  கொரோனா அறிகுறி இருந்த நிலையில் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சற்று நேரத்திற்கு முன் அமித்ஷா தனது  ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டார். அதில், இன்று செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது. நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், என்னை ஆசீர்வதித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இன்னும் சில நாட்கள் வீட்டில் தனிமையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

unknown node