மாறுவேடத்தில் சுற்றித்திரியும் அம்ரித்பால் சிங்; இணையதளத்தில் புதிய புகைப்படம் வைரல்.!

போலீசாரால் தேடப்படும் அம்ரித்பால் சிங், மாறுவேடத்தில் கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்.

போலீசாரால் தேடப்படும் அம்ரித்பால் சிங், மாறுவேடத்தில் கூல் ட்ரிங்க்ஸ் குடிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரல்.

காலிஸ்தானி தலைவரும் வாரிஸ் பஞ்சாப் டி தலைவருமான அம்ரித்பால் சிங் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, காவல்துறையினருக்கு பிடிபடாமல் தலைமறைவாக இருந்துவருகிறார். பஞ்சாப் காவல்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள், அம்ரித்பால் சிங்கைப் பிடிக்கும் முயற்சியில்  திட்டங்களை வகுத்து, தங்கள் தேடலை மேலும் விரிவுபடுத்தி வருகின்றன.

காலிஸ்தானி தலைவர் அம்ரித்பால் சிங், தொடர்ந்து தப்பித்துக் கொண்டிருக்கும் நிலையில், அவரது புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது அவரது சமீபத்திய புகைப்படம் என்று போலீசாரால்சந்தேகிக்கப்படுகிறது.

பொதுமக்கள் அம்ரித்பால் சிங்கை அடையாளம் காட்டுவதற்கு ஏதுவாக, காவல்துறை அவரின் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்ட பிறகு, அவரது செல்ஃபீ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. காலிஸ்தானி தலைவரின் புதிய புகைப்படத்தில், அவர் மெரூன் நிற தலைப்பாகை மற்றும் சன்கிளாஸ் அணிந்து கொண்டு கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதைக் காணலாம்.

அவருடன் அருகில் இருக்கும் நெருங்கிய உதவியாளரும், கூட்டாளியுமான  பப்பல்ப்ரீத் சிங்கும், மார்ச் 18 முதல் போலீஸாரால் தேடப்படுகிறார். இரண்டு பேரும் ஒன்றாகத் தப்பியோடி இருப்பதாக நம்பப்படுகிறது. இருப்பினும் புகைப்படத்தின் நேரம் மற்றும் இடம் உறுதியாகாததால் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.