தீவிர சீக்கிய மத போதகர் அம்ரித்பால் சிங், பொற்கோவிலில் சரணடைவார் என்ற ஊகங்களுக்கு மத்தியில் 12 நாட்களாக காவல்துறையினரின் தேடுதல் வேட்டையிலிருந்து தப்பித்து தலைமறைவாக இருப்பதை உறுதிப்படுத்தும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
அம்ரித்பால் சிங் பஞ்சாப் திரும்பியதாகவும், சரணடையத் திட்டமிட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.
இந்த காட்சிகள் குறித்து பஞ்சாப் போலீசார் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இந்த வீடியோவில் காணப்பட்டவர்கள் அம்ரித்பால் சிங் மற்றும் அவரது உதவியாளர்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிததாக NDTV செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் மீதான அரசாங்க நடவடிக்கை “அவர் கைது செய்யப்பட்டதற்காக அல்ல, ஆனால் சீக்கிய சமூகத்தின் மீதான தாக்குதல்” என்று கூறினார்.மேலும், அரசு தன்னை கைது செய்ய நினைத்தால் வீட்டில் இருந்தே கைது செய்திருக்கலாம் என்றார்.ஆனால், அரசாங்கம் என்னைச் சுற்றிவளைக்க முயன்றதால், கடவுளின் அருளால் நான் வெளியே வர முடிந்தது.
பஞ்சாப் அரசு அடக்குமுறையின் எல்லையைத் தாண்டியுள்ளது.சீக்கிய இளைஞர்கள் சிறைக்குள் தள்ளப்பட்ட விதம்… பெண்களும் குழந்தைகளும் தப்பவில்லை.ஊனமுற்ற இளைஞர்களும் சிறைக்கு அனுப்பப்பட்டனர்.பியாந்த் சிங்கின் ஆட்சியில் சீக்கியர்களுக்கு நடந்ததைப் போன்றதுதான்,” என்றார்.
யாராலும் தன்னைத் துன்புறுத்த முடியாது என்று கூறிய அம்ரித்பால், கைது செய்யப்படுவதைக் கண்டு பயப்படவில்லை என்றார்.“உலகம் முழுவதும் எனக்காக போராடிய அனைத்து சங்கத்தினருக்கும் நன்றி.ஆனால் அது எனது கைது தொடர்பானது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.இது சீக்கிய சமூகத்தின் மீதான தாக்குதல்.நான் முன்பு எனது கைது பற்றி பயப்படவில்லை, இப்போது இல்லை, ”என்று அவர் கூறினார்.
“நான் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறேன். யாரும் எனக்கு தீங்கு செய்ய முடியாது. அது கடவுளின் அருள். என் கைது கடவுளின் கையில் உள்ளது” என்று கூறியுள்ளார்.இருப்பினும் அம்ரித்பால் தனி நாடு அல்லது காலிஸ்தான் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
unknown node