மாரத்தான் போட்டியில் களமிறங்கிய 80 வயது மூதாட்டி..! வைரலாகும் அசத்தல் வீடியோ..!

மும்பை மாரத்தானில் பங்கேற்று ஓடிய 80 வயது மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மும்பை மாரத்தானில் பங்கேற்று ஓடிய 80 வயது மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

மும்பையில் நடைபெற்ற டாடா மும்பை மாரத்தான் போட்டியில் 55,000 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அனைத்து வயதினரும் கலந்து கொண்ட இந்த போட்டியில் பங்கேற்று ஓடிய 80 வயது மூதாட்டியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

80 வயதான இவர் சேலை மற்றும் ஸ்னீக்கர்களுடன் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி ஓடினார். மாரத்தான் பதிவின் படி அவர் 51 நிமிடங்களில் 4.2 கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளார். அவர் இதுவரை நான்கு மாரத்தான் போட்டிகளில் பங்கேற்றதாகவும் இது தனது ஐந்தாவது போட்டி என்று கூறினார்.

தான் ஒரு பெருமைமிக்க இந்தியன் என்பதாலும், தன் தேசிய அடையாளத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும் தான் தேசிய கொடியுடன் ஓடியதாக அவர் மேலும் கூறினார். 80 வயதாகியும் மனம் தளராத இவரது முயற்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

unknown node