பாட்டியிடம் செயின் பறிக்கும் முயற்சி...! முறியடித்த 10 வயது சிறுமி..வெளியாகிய வைரல் வீடியோ...!

பாட்டியிடம் செயின் பறிக்கும் முயற்சியை முறியடித்த 10 வயது சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரல் வருகிறது.

பாட்டியிடம் செயின் பறிக்கும் முயற்சியை முறியடித்த 10 வயது சிறுமியின் வீடியோ இணையத்தில் வைரல் வருகிறது.

மகாராஷ்டிராவின் புனே நகரில் 10 வயது சிறுமி தனது பாட்டியின் செயினை பறிக்கும் முயற்சியை செயின் பறிப்பவரின் முயற்சியை முறியடிக்கும் சிசிடிவி காட்சி சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு மூதாட்டி குடியிருப்பு பகுதியில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் நடந்து செல்கிறார். அவருக்கு அருகில் இரண்டு குழந்தைகளும் அவருடன் நடந்து செல்கின்றனர்.

அப்பொழுது திடிரென்று இருசக்கர வாகனத்தில் வந்த நபர் தனது வாகனத்தை நிறுத்தி மூதாட்டியிடம் இருந்து செயினை பறிக்க முயன்றார். ஆனால் அவருடன் வந்து கொண்டிருந்த சிறுமி சுதாரித்துக்கொண்டு அவர் கையில் வைத்திருந்த பையால் அந்த நபரை தாக்கியுள்ளார். அதனால் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பயந்து அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.

பிப்ரவரி 25 அன்று நடந்த இச்சம்பத்தின் வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவல் அதிகாரிகள் 10 வயது சிறுமியின் துணிச்சலான செயலை பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

unknown node