மொபைல் சார்ஜர் வயரின் பின்னை மென்று தின்ற எட்டு மாத குழந்தை..! பரிதாபமாக உயிரிழப்பு..!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் உள்ள சித்தராடா கிராமத்தில் வசித்து வருபவர்கள், சந்தோஷ் கல்குட்கர் - சஞ்சனா கல்குட்கர்

baby

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள கார்வார் தாலுகாவில் உள்ள சித்தராடா கிராமத்தில் வசித்து வருபவர்கள், சந்தோஷ் கல்குட்கர் – சஞ்சனா கல்குட்கர் தம்பதியினர். இவர்களது மகள் தான் சானித்யா.

இந்த நிலையில், அவர்களது வீட்டில் மொபைல் சார்ஜர் சுவிட்ச் போர்டில் இணைக்கப்பட்டிருந்துள்ளது. சுவிட்ச் அணைக்கப்படவில்லை. இந்த நிலையில், குழந்தை சானித்யா சார்ஜர் ஒயர் பின்னை மென்று சாப்பிட்ட போது மின்சாரம் தாக்கியது. இதனையடுத்து, குடும்பத்தினர் உடனடியாக அவரை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால் மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

அவரது தந்தை, சந்தோஷ் கல்குடக், ஹுப்பள்ளி மின்சாரம் வழங்கும் நிறுவனத்தில் (ஹெஸ்காம்) ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிகிறார். இந்த சம்பவம் குறித்து அறிந்ததும், அவர் பணியிடத்தில் மயங்கி விழுந்துள்ளார். சானித்யா தம்பதியருக்கு மூன்றாவது குழந்தை ஆகும். இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.