ராஜஸ்தானில் மிகச்சிறிய மரக்கரண்டியை செய்து இந்தியர் ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த கைவினை கலைஞர் நவரதன் பிரஜாபதி என்பவர். இவர் மரக்கட்டையை வைத்து உலகில் மிக சிறிய மரக்கரண்டியை உருவாக்கியுள்ளார். இவர் உருவாக்கிய மரக்கரண்டி 2 மி.மீ நீளம் கொண்டுள்ளது.
இவர் உருவாக்கிய இந்த மரக்கரண்டி தற்பொழுது உலகிலேயே மிகச்சிறிய கரண்டி என கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டு உலக சாதனையில் இடம்பெற்ற தெலுங்கானாவைச் சேர்ந்த கௌரிசங்கர் கும்மாடிதாலா என்பவர் வடிவமைத்த 4.5 மிமீ நீளமுள்ள மரக் கரண்டியின் அளவை விட இது மிக சிறியது என்பது குறிப்பிடத்தக்கது.