ஆந்திரா : கனமழை மற்றும் வெள்ளத்தால் 14 பேர் உயிரிழப்பு ..!

Heavy rains and floods in Andhra Pradesh have claimed 12 lives so far.

ஆந்திராவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 14  பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் ஆந்திராவிலும் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் தொடர் கனமழை காரணமாக இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், 1500-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 3.4 ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளதாகவும், நூற்றுக்கணக்கான கால்நடைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.