மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 257 பேர் கொரோனா தோற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.
அந்த வகையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 9,251 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,66,368 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் மேலும் 257 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13,389 ஆக உயர்ந்தது. மேலும் 5,714 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 2,07,194 ஆக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,45,481 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
unknown node