ஆய்வு செய்ய நியமித்த குழு ! இன்று விவசாயிகளுடன் சந்திப்பு

The panel, appointed by the Supreme Court to study the new agricultural laws, is set to meet farmers today for the first time.

உச்ச நீதிமன்றம் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய நியமித்த குழுவினர், முதல்முறையாக இன்று விவசாயிகளை சந்திக்க உள்ளனர்.

டெல்லியில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக, மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.ஆனால் பல முறை நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் தான் முடிந்தது. இதற்கு முன்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கிறோம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது . விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வுகாணவும், வேளாண் சட்டங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக உள்ள நிறை, குறைகளை குழுவிடம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.3 வேளாண் சட்டங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையை முன்னெடுக்க உச்சநீதி மன்றம் சார்பில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.ஆனால் விவசாயிகள் குழுவில் அமைக்கப்பட்டவர்கள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்கள் என்றும் இந்த குழுவை ஏற்கவில்லை என்றும் தெரிவித்தனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய நியமித்த குழுவினர், முதல்முறையாக இன்று விவசாயிகளை சந்திக்க உள்ளனர்.