44 நீதிபதிகள் நியமனத்துக்கு 3 நாட்களில் ஒப்புதல் தரப்படும் என்று மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உறுதி.
44 நீதிபதிகள் நியமனத்துக்கு 3 நாட்களில் ஒப்புதல் தரப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.வெங்கடரமணி 44 நீதிபதிகள் நியமனத்துக்கு 3 நாட்களில் ஒப்புதல் தரப்படும் என தெரிவித்தார்.
நீதிபதிகள் எஸ்கே கவுல், அபய் எஸ்.ஓகா அமர்வு முன் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உறுதியளித்தார். 104 நீதிபதிகள் தொடர்பான கொலீஜியத்தின் பரிந்துரை மத்திய அரசிடம் நிலுவையில் உள்ளது. 104 பேர் கொண்ட பட்டியலில் இருந்து 44 நீதிபதிகளை தெரிவு செய்து அறிவிக்கப்படும் எனவும் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.