காதலியை கொன்று புதைத்த இடத்தில் செடியை நட்டுவைத்த ராணுவ வீரர்!

Published by
murugan

கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரா திருபுரம்  பகுதியை சார்ந்தவர் ராக்கி .இவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஜூன் 21-ம் தேதி முதல் காணவில்லை என பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் காணாமல் போன ராக்கியை  தேடி வந்தனர்.

ராக்கியின் செல்போன் பதிவை வைத்து கண்டுபிடித்ததில் அகில் என்பவரை காதலித்து வந்ததாக தெரியவந்தது. அகிலை தேடிய போது அவரது நண்பன் ஆதர்ஷ் சிக்கி கொண்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் ராக்கியை  கொன்று அகில் வீட்டின் பின் புறத்தில் புதைத்ததாக கூறினார்.

தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் சில அதிர்ச்சியான தகவலும் வெளியானது. இராணுவ வீரரான அகில் ,ராக்கி உடன்  மிக நெருக்கமாக பழகி வந்து உள்ளார். திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி இருந்தார்.ஆனால் ராக்கிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணுடன் அகிலுக்கு நிச்சயதார்த்தம் முடித்து உள்ளது.

இது தெரிந்த ராக்கி அகிலிடன்  தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி சண்டை போட்டுள்ளார். பின்னர்  அவர் நிச்சயம் செய்யப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு சென்று நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதனால் அகிலுக்கு கோபம் தலைக்கேறியது. இந்த பிரச்சனையை பற்றி பேச அகில் ஆம்பூரில் உள்ள தனது வீட்டிற்கு ராக்கியை  வர சொன்னார்.

அப்போது இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அகில் ராக்கியின் கழுத்தை நெரித்து கொன்றார். பின்னர் தனது தம்பியின் நண்பரான ஆதர்ஷ் உதவியுடன் வீட்டுக்கு பின்  யாருக்கும் தெரியாமல் குழிதோண்டி புதைத்துவிட்டனர். பிறகு குழிக்கு மேல் செடிகளை நட்டு வைத்துள்ளனர். இந்த சம்பவத்தை நடத்திவிட்டு அகில் டெல்லிக்கு பணிக்கு சென்று விட்டார்.

புதைக்கப்பட்ட ராக்கியின் உடலை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அகிலை டெல்லியில் இருந்து கேரளாவிற்கு வரவைக்கும் வேலையில் போலீஸாரிடம் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

Published by
murugan

Recent Posts

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

10 minutes ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

41 minutes ago

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

44 minutes ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

1 hour ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

3 hours ago