ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டதில், தீவிரவாதிகள் தாக்குதல் என ராணுவ தளபதி விளக்கம்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் ராணுவ வாகனம் சென்று கொண்டிருந்தபோது தீப்பிடித்து விபத்துக்குள்ளாகியது, இந்த விபத்தில் 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், மற்றும் படுகாயமடைந்த ஒருவர் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து இந்திய ராணுவம் தற்போது இது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய ராணுவத்தளபதி மனோஜ் பாண்டே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலால் ராணுவ வாகனம் தீப்பிடித்து, 5 வீரர்கள் உயிரிழந்ததாக விளக்கம் அளித்துள்ளார். தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதால், வாகனம் தீப்பிடித்துள்ளது என அவர் கூறியுள்ளார்.