#AseemblyElectionResult: திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி!

திரிபுரா மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக அணி 15ல் வெற்றி பெற்று, 18ல் முன்னிலை பெற்றுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக அணி 15ல் வெற்றி பெற்று, 18ல் முன்னிலை பெற்றுள்ளது.

திரிபுரா மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களில் 34 இடங்களில் பாஜக அணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. திமோக 12 இடங்களிலும், இடதுசாரி – காங்கிரஸ் கூட்டணி 14 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. திரிபுராவில் ஆளுங்கட்சியான பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியை அமைக்கிறது.

கொண்டாட்டத்தில் தொண்டர்கள்:

அகர்தலாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 15ல் வெற்றி பெற்று, 18ல் முன்னிலை பெற்றுள்ளதால் பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். முதல்வர் மாணிக் சாஹா, முன்னாள் முதல்வரும், கட்சியின் எம்பியுமான பிப்லாப் தேப் மற்றும் கட்சியின் தலைவர் சம்பித் பத்ரா ஆகியோர் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார்.

திரிபுரா முதல்வர் வெற்றி:

இந்த நிலையில், திரிபுராவின் தற்போதைய முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளருமான மாணிக் சாஹா பர்தோவாலி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய திரிபுரா முதல்வர் டாக்டர் மாணிக் சாஹா 19,586 வாக்குகள் பெற்று பாஜக சார்பில் டவுன் பர்தோவாலி சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.

பாஜகவினருக்கு நன்றி:

70 வயதான மூத்த அரசியல்வாதி காங்கிரஸின் ஆசிஷ் குமார் சாஹாவை எதிர்த்து போட்டியிட்டு 832 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜேபி நட்டா, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் அனைத்து கட்சி தொண்டர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். எனவே, மீண்டும் முதல்வராக வருவார் என எதிர்பார்க்கப்படும் சாஹா, பதவியேற்பு தேதி பின்னர் முடிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளார்.