ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடர்! 6 தமிழக வீரர்களுக்கு அணியில் இடம்.!

பத்தாவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்திய அணியில் 6 தமிழகவீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

பத்தாவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்திய அணியில் 6 தமிழகவீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், கஜகஸ்தானில் வரும் பிப்ரவரி-10இல் தொடங்கி பிப்-12 வரை நடைபெறுகிறது. இந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் தமிழகத்தைச்சேர்ந்த இலக்கியதாசன், சிவசுப்பிரமணியன், ஜெஸ்வின் அல்ட்ரின், பிரவின் சித்திரவேல், ரோசி மீனா பால்ராஜ், மற்றும் பவித்ரா வெங்கடேஷ் ஆகிய 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.