தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி, திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட அவகாசத்தோடு மத்திய அரசின் ‘ஆத்ம நிர்பார் ‘ திட்டத்தின் கீழ் 10,000 ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.
பொது சேவை மையம் மூலம் ஓர் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சகமானது, தெருவோர வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் மூலதன கடன் வழங்கும் ‘ஆத்ம நிர்பார் ‘ திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த கடன்தொகையானது, தெருவோர வியாபாரிகளுக்கு எந்தவித பிணையும் இன்றி, திருப்பி செலுத்துவதற்கு ஒரு வருட அவகாசத்தோடு வழங்கப்படுகிறது. இந்த கடனை பெறுவதற்கு நாடெங்கிலும் உள்ள 3.8 லட்ச பொது சேவை மையத்தில் (Common Service Center) வழிமுறை கூறப்படுகிறது.
இந்த ஆத்ம நிர்பார் திட்டத்தின் மூலம், தெருவோர வியாபாரிகளை இணைக்க முடியும் என கூறப்படுகிறது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக இணைச்செயலாளர் சஞ்சய் குமார் கூறுகையில், ‘ ஆத்ம நிர்பார் திட்டத்தில் இணையவழி பரிவர்த்தனைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இணைய பரிவர்த்தனை செய்பவர்களுக்கு, கேஷ்பேக் போன்ற சலுகைகளும் வழங்கப்படும். என தெரிவித்தார்.
மேலும், ‘ இதுவரை 2 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், அதில் 50,000 பேருக்கு கடன் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும். ‘ அவர் குறிப்பிட்டார்.
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…
கோவை : மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில்…
சென்னை : கடந்த 2019-ம் ஆண்டு கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம்…
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…