உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் கடந்த 31-தேதி ஆற்றின் கால்வாயில் ஒரு கங்கை டால்பினை 5-க்கும் மேற்பட்ட கும்பல் ஒன்று கோடரி மற்றும் கட்டையை கொண்டு அடித்து கொன்றனர். பின்னர், வனத்துறைக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்தபோது டால்பின் உயிரிழந்து இருந்ததாக வன அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அருகில் இருந்த கிராமத்தினர் யாரும் நடந்த சம்பவம் பற்றி தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தான் டால்பினை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த வீடியோவை ஆதாரமாக கொண்டு 3 இளைஞர்களை போலீசர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
unknown nodeகரையில் இருந்த சிலருக்கு டால்பின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை, இவர்கள் தாக்கியதில் டால்பினின் உடலில் இருந்து ரத்தம் சொட்டுவதையும் வீடியோவில் தெரிகிறது. கங்கை டால்பின்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட இனம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.