எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு....! இன்றும் நாளையும் சில மணி நேரம் ஆன்லைன் வங்கி சேவைகள் இயங்காது!

It has been reported that online banking service and digital banking service in SBI banks will not be operational for a few hours today and tomorrow due to maintenance work.

பராமரிப்பு பணிகள் காரணமாக எஸ்பிஐ வங்கிகளில் ஆன்லைன் வங்கி சேவை, டிஜிட்டல் வங்கி சேவை இன்றும் நாளையும் சில மணி நேரம் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக இருந்து, இணைய சேவைகளை பயன்படுத்துபவர்களாக இருந்தால் உங்களுக்கு தான் இந்த முக்கியமான தகவல். எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவைகள் இன்றும் நாளையும் சிறிது நேரம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கியின் ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், எஸ்பிஐ ஆன்லைன் வங்கி சேவை மற்றும் டிஜிட்டல் சேவைகள் ஆகஸ்ட் 6 மற்றும் 7 ம் தேதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக சில மணி நேரங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது ஆகஸ்ட் 6-ம் தேதி 22.45 மணி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி 1.15 மணி வரை இந்த பராமரிப்பு பணிகள் நடைபெறும் எனவும், இந்த சில மணி நேரங்கள் எஸ்பிஐ வங்கியின் இணைய சேவைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட நேரத்தில் வாடிக்கையாளர்கள் எஸ்பிஐ யோனோ, யோனோ லைட் மற்றும் யோனோ பிசினஸ் உள்ளிட்ட பிற டிஜிட்டல் தளங்களை கூட  பயன்படுத்த முடியாதாம். இந்த பராமரிப்பு பணிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு வாடிக்கையாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமெனவும் எஸ்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது.

unknown node