ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் மருத்துவமனையில் அனுமதி..!

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் உடல்நலக்குறைவால் ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  சிபு சோரன் மூச்சுத்திணறல் காரணமாக ஒரு மணி நேரத்திற்கு முன்பு ராஞ்சியில் உள்ள மேதாந்தா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

unknown node

[Image Source : Telegraph]

அங்கு ஐந்து பேர் கொண்ட மருத்துவ குழு முதற்கட்ட பரிசோதனையை நடத்தி வருகிறது. இது குறித்து மேதாந்தா மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் அஜீத் சிங் கூறுகையில், மூச்சுத்தினரா காரணமாக மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட சோரன், இன்னும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை என்றும் மருத்துவமனை ஐந்து பேர் கொண்ட பரிசோதனைக் குழுவை அமைத்துள்ளது என்றும் கூறினார்.

unknown node

[Representative Image]

ஜார்கண்ட்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள நேம்ரா என்ற ஊரில் பிறந்த 79 வயதான சிபு சோரன் மூன்று முறை ஜார்கண்ட் முதல்வராக பணியாற்றி உள்ளார்  என்பது குறிப்பிடத்தக்கது.