ஜம்மு காஷ்மீர் மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு..! பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை..!

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்பு.

ஜம்மு மற்றும் காஷ்மீரில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்பு.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் யூனியன் பிரதேசத்தில் உள்ள சில மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, யூனியன் பிரதேசத்தின் தோடா, கிஷ்த்வார், பூஞ்ச் மற்றும் ராம்பான் ஆகிய மாவட்டங்களில் கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரத்தில் குறைந்த அபாய நிலை பனிச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது

இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், மேலும் மறு உத்தரவு வரும் வரை பனிச்சரிவு ஏற்படும் பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.