அயோத்தி ராமர் கோயிலின் கட்டுமானப்பணியை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பார்வையிட்டார்.
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ஸ்ரீராம ஜென்மபூமி கோயிலை, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரில் சென்று பார்வையிட்டார். உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், நீண்ட சட்ட போராட்டத்திற்கு பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டுவருகிறது. இதன்படி 110 ஏக்கரில் பிரமாண்டமாக கோயில் கட்டப்பட்டு வருகிறது.
பிரதமர் மோடி 2020இல் இதற்கான அடிக்கல் நாட்டும் பணியை தொடங்கி வைத்து கோயிலின் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயிலின் கட்டுமானப்பணியில் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த பயணத்தில் அவர் அயோத்தியில் ஸ்ரீ ராம்நாம் ஸ்தூபி மற்றும் ஸ்ரீ ராம்லாலா பவன் ஆகியவற்றை திறந்து வைத்தார். ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் 70 சதவீதம் முடிந்துவிட்டதாக முதல்வர் ஆதித்யநாத்துக்குத் தெரிவிக்கப்பட்டது. 2024 ஆம் ஆண்டு கோயில் மக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
unknown node