பிரதமர் மோடியின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ம் தேதி அன்று சாமானிய மக்களுக்கு உதவியாக இருக்கும் வகையில், “ஆயுஷ்மான் பவ” திட்டத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. இத்தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். ந்த நிகழ்ச்சியின் போது 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதுகுறித்து பேசிய அவர், “தனிநபர்கள் உட்பட ஒவ்வொரு பயனாளிக்கும் அரசின் அனைத்து சுகாதாரத் திட்டங்களையும் சென்றடைய ‘ஆயுஷ்மான் பவ’ என்ற திட்டத்தை மத்திய அரசு உள்ளது. செப்டம்பர்-17ம் தேதி தொடங்கி அக்டோபர் 2ம் தேதி நிறைவடையும். இந்த 15 நாட்களில் இந்தியா முழுவதும் அரசின் பயனாளிகளுக்கான திட்டங்களை செயல்படுத்துவோம்”
“இந்த நிகழ்ச்சியின் போது முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, 60,000 பேருக்கு ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்படும்.ஆயுஷ்மான் பாரத் – பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) என்பது உலகின் மிகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாகும். இது ஒரு பயனாளி அல்லது ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ. 5 லட்சம் வரை உதவி வழங்குகிறது.”
“காசநோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு 100% ஆயுஷ்மான் பாரத் அட்டைகள் வழங்கப்பட்ட கிராமங்களை ஆயுஷ்மான் கிராமங்களாக அறிவிக்கும் ‘ஆயுஷ்மான் சபா’வை அக்டோபர் 2ஆம் தேதி நடத்துவோம். காசநோயை முற்றிலும் அகற்றுவதற்கான இலக்கு 2030 ஆகும். ஆனால் இந்தியா 2025 இன் இறுதிக்குள் காசநோயை அகற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்று கூறினார்.
மேலும், “தற்போதைய காலகட்டத்தில், டிஜிட்டல் ஹெல்த் சுகாதாரத் துறையில் பெரும் புரட்சியைக் கொண்டு வந்துள்ளது. கோவிட் நெருக்கடியின் போது, மக்கள் வெளியே செல்ல முடியவில்லை, ஆனால் 10-15 லட்சம் பேர் தங்கள் வீடுகளில் அமர்ந்து சிறப்பு மருத்துவர்களிடமிருந்து தொலைத் தொடர்புகளைப் பெறுவதை நாங்கள் கண்டோம். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் தொலைத்தொடர்பு சாத்தியமானது” என்றும் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
