பெங்களூரை சேர்ந்த பிரபல நாய் வளர்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் 20 கோடி மதிப்பிலான காகேசியன் ஷெப்பர்ட் இனத்தை நாயை வாங்கியுள்ளார்.
பெரும்பாலான மக்களுக்கு செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. அனைவருக்கும் மிகவும் பிடித்த செல்லப்பிராணிகளில் ஒன்றுதான் நாய். இதனால் அனைவரும் பலவகை நாய்க்குட்டிகளை வாங்குகின்றனர். சமீபத்தில் பெங்களூரில் நாய் விற்பனையானது நடந்து வருகிறது. இந்த விற்பனையில் பிரபல நாய் வளர்ப்பு நிறுவனமான கடபோம்ஸ் கென்னலின் உரிமையாளர் சதீஷ் என்பவர் காகேசியன் ஷெப்பர்ட் இன நாயை வாங்கியுள்ளார்.
இந்த நாயின் விலையானது சுமார் 20 கோடியாகும். இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரான சதிஷ் ஹைதராபாத்தில் உள்ள விற்பனையாளரிடமிருந்து ஒன்றரை (1.5) வயதுடைய காகேசியன் ஷெப்பர்ட் இன நாயை வாங்கி இருக்கிறார். இந்த நாய்க்கு ‘கடபோம் ஹைடர்’ என்று பெயரிட்டுள்ளார். காகசியன் ஷெப்பர்ட் என்பது காகசஸ் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில், குறிப்பாக ஜார்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான், ஒசேஷியா, சர்க்காசியா, துருக்கி, ரஷ்யா மற்றும் தாகெஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாவலர் நாய் ஆகும்.
இந்தியாவில் இந்த வகை நாய் மிகவும் அரியவகை இனமாகும். காகசியன் ஷெப்பர் வகை நாயானது சராசரியாக 23 முதல் 30 அங்குலங்கள் உயரம் வரை வளரக்கூடியவை மற்றும் அதன் எடை 45 முதல் 77 கிலோகிராம் வரை இருக்கும். இதன் ஆயுட்காலம் 10 ஆண்டு முதல் 12 ஆண்டுகள் ஆகும். கடபோம் ஹைடர் அறிமுகப்படுத்த வரும் பிப்ரவரி மாதம் பெங்களூரில் பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளார்.
unknown node