வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்

வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

வங்கி திவால் சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்  இன்று நடைபெற்று வருகிறது.இந்நிலையில்மாநிலங்களவையில் வங்கி திவால் சட்ட திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர்நிர்மலாசீதாராமன் தாக்கல் செய்தார்.கடனை திரும்ப செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ஒத்தி வைப்பதற்கான திருத்தம் ஆகும்.அதாவது,2020-ஆம் ஆண்டு கடன் நொடிப்பு மற்றும் வங்கி திவால் சட்டத்தை திருத்தம் செய்து அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டமானது தொழில் நிறுவனங்களை கருத்தில் கொண்டு வங்கி திவால் சட்டத்தில் கீழ் நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டது.

இந்த மசோதாவைதாக்கல் செய்த பின்னர்நிர்மலாசீதாராமன் பேசுகையில்,மார்ச் 25-ஆம் தேதிக்கு முன்பு வரை கடன் வாங்கி செலுத்தாதவர்கள் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவித்தார்.  இதனையடுத்து வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.