நாடாளுமன்றத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் கூட்டம்.!

பாரதிய ஜனதா கட்சியின் வாராந்திர கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

பாரதிய ஜனதா கட்சியின் வாராந்திர கூட்டம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது.

ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் நாடாளுமன்றத்தில் நடைபெறும் பாரதிய ஜனதா கட்சியின் வாராந்திர கூட்டம் இன்று நடைபெறுகிறது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட மத்திய பட்ஜெட் 2023-24 உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்த விவாதம், இந்தக் கூட்டத்தில் நடைபெறும். இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய தலைவர்கள் உட்பட பிரதமர் நரேந்திர மோடியும் கலந்து கொண்டு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி ஜனாதிபதி திரௌபதி முர்முவின் கூட்டு உரையுடன் தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்தார்.

அதன்பிறகு அதானி விவகாரத்தில் தொடர்ந்து அமளி நிலவியதால் நாடாளுமன்றத்தில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை, இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டதைத் தொடர்ந்து, அதானி பங்கு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அரசு பதில் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

அதானி குழுமம் மீதான பங்கு மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பாதி பிப்ரவரி 13 வரையிலும், இரண்டாம் பாதி மார்ச் 13 முதல் ஏப்ரல் 6 வரையிலும் நடைபெறுகிறது.