பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய போஜ்புரி நடிகை.! போலீசார் அதிரடி கைது..!

மும்பையில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய போஜ்புரி நடிகையை போலீசார் கைது செய்தனர்.

மும்பையில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய போஜ்புரி நடிகையை போலீசார் கைது செய்தனர்.

மும்பையின் கோரேகானில் உள்ள ராயல் பால்ம் ஹோட்டலில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சுமன் குமாரி என்ற போஜ்புரி நடிகையை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். கோரேகானில் உள்ள ராயல் பால்ம் ஹோட்டலில் பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக தகவல் அறிந்த காவல்துறையினர் ஒரு குழுவுடன் ஹோட்டலில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் ஹோட்டலில் இருந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட மூன்று பெண்களை மீட்டு, அவர்களை விபாச்சாரத்தில் தள்ளியதாக போஜ்புரி நடிகையான சுமன் குமாரியை மும்பை காவல்துறையின் சமூக சேவைப் பிரிவினர் கைது செய்தனர். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருவதோடு குமாரியுடன் தொடர்பு இருந்ததாகக் கூறப்படும் மற்றொரு குற்றவாளி ஒருவரைத் தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

சுமன் குமாரி‘லைலா மஜ்னு’ மற்றும் ‘பாப் நம்பரி, பீட்டா தஸ் நம்பரி’ போன்ற போஜ்புரி படங்களில் நடித்துள்ளார். அவர் இந்தி, பஞ்சாபி மற்றும் போஜ்புரி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் பாடல்களிலும் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.